நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி காலமானார். அவருக்கு தமிழ் சினிமா துறை நட்சத்திரங்கள், மற்றும் அரசியல்வாதிகள் பலரும் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
விஜயகாந்த் எல்லோருக்கும் உணவளித்ததை கூறி தான் ஏராளமான ரசிகர்கள் கண்ணீர் சிந்தினார்கள்.
விஜயகாந்த் தன்னிடம் சொன்ன ஒரு விஷயத்தை பற்றி தயாரிப்பாளர் டி.சிவா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
“விஜயகாந்த் இறந்தபோது தீவுத்திடலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்கள். இரண்டு கிலோமீட்டர் முன்பே வண்டியை நிறுத்திவிட்டு சென்று பார்ப்பதை கவனித்தேன்.”
“எம்ஜிஆர் இறந்தபோது அவரை பார்க்க ஏராளமானோர் கண்ணீருடன் சென்றார்கள். மக்கள் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டு செல்வதை பார்த்து விஜயாகாந்த் ஒன்று சொன்னது என் நினைவில் இருக்கிறது.”
செத்தா இப்படி சாகனும் என விஜயகாந்த் சொன்னார். அவர் சொன்னது தற்போது அவருக்கே நடந்தது என டி.சிவா கூறி இருக்கிறார்.








































