Loading...
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்தபிக்குகள் தலைமையிலான ஒரு குழுவினர் விஜயம் செய்திருந்தனர்.
இன்று (11) இராணுவத்தினரின் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகனத்தினரும் அங்கு பிரசன்னமாகியிந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
Loading...
இதேவேளை ஆலயம் அமைந்துள்ள தங்களது இடம் என குறித்த குழுவினால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை மறுத்த ஆலய நிர்வாகத்தினர் இது தமது மூதாதையர்களால் பூர்விகமாக வழிபடப்பட்டு வந்த பிரதேசம் என தெரிவித்திருந்தனர்.
அத்துடன் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் பாதணிகளுடன் உள்நுழைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...








































