பிரபல தமிழ் நடிகரான விஷ்ணு விஷால் தன்னுடைய முதல் மனைவியை பிரிந்தது குறித்து பேட்டியளித்துள்ளார்.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் விஷ்ணு விஷால்.
தனக்கென்ற பாணியில் மிக வித்தியாசமான கதைக்களத்தின் நாயகனாக களமிறங்ககூடியவர் விஷ்ணு விஷால்.
கடந்த 2018ம் ஆண்டு தன்னுடைய மனைவியான ரஜினியை விவாகரத்து செய்து கொண்டார், இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறார்.
அதிலிருந்து மீண்டு வந்த விஷ்ணு, பாட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலாவை 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், இருப்பினும் தந்தைக்கான கடமையை மகனுக்கு செய்து கொண்டே தான் இருக்கிறார்.
இந்நிலையில் இவரது நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
அதில் தன்னுடைய அனுபவம் குறித்தும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து நிறைய விடயங்கள் கற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இவர் அளித்த பேட்டியில், தன்னுடைய முதல் மனைவியை பிரிந்தது குறித்து பேசியுள்ளார்.
அதில், இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, இனிமேல் தனியாக தான் இருக்கப்போகிறோம் என்ற முடிவை எடுத்து விட்டேன்.
என்னிடம் விவாகரத்து கேட்டது அவர் தான், நீதிமன்றத்தில் கேட்டபோது கூட நான் அமைதியாக தான் இருந்தேன் என தெரிவித்தார்.
மேலும், ஜுவாலா என்னுடன் பழகிய போதே, நான் கூறினேன், ஏன் என்னுடன் பழகுகிறாய், எனக்கு ஒரு மகன் இருக்கிறான், நான் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று சொன்னேன்.
அவர் பாசிட்டிவ்வான நபர், என்னை மிகவும் பிடித்திருக்கிறது என்றார், அப்போது தான் யோசித்தேன் நம் பிரச்சனைகளை காரணம் காட்டி மற்றவரின் ஆசையை ஏன் புறக்கணிக்க வேண்டும்.
சில நாட்களில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம், அவரும் விவாகரத்தான் பெண்மணி தான் என தெரிவித்தார்.








































