பாலில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத உணவு பால்
ஆனால் ஒரு பருவத்திற்கு மேல் அதிகமாக எடுத்துக் கொள்வது உடலில் பல நோய்களை கொண்டு வரும் என்பது உங்களுக்கு தெரியுமா?
குறிப்பிட்ட வயதிற்கு மேல் பால் குடித்தால் அது நமது உடலில் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்துமாம்.
1. எல்லோருக்கும் தெரிந்திராத விஷயம் ஒன்று நாம் சிறு வயதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் உணவுகளை உண்போம்.
ஆனால் 18 வயதிற்கு மேல் உணவு பிடிக்காமல் இருக்கும், இதனால் அஜீரணப்பிரச்சனை குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரலாம்.
இந்த பிரச்சனைகளை தான் லாக்டோஸ் சகிப்புத்தன்மை என கூறுவார்கள். இது குறிப்பட்ட வயதிற்கு மேல் பால் குடிப்பதால் ஏற்படுகிறது.
2. பாலால் செய்யப்பட்ட உணவுகள் அதாவது பால் டீ, பால் காபி போன்றவற்றை அதிகமாக குடிக்க கூடாது.
இந்த பானங்கள் குடலில் தங்கி ஒரு விதமான சகிப்புத்தன்மையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் குடல் அழற்சி, வயிறு வீக்கம், அஜீரணக் கோளாறு, அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
பாலில் அதிகமாக ஆன்டிஜென்ட் உள்ளன. இது குடலில் தங்கி நிற்பதால் அது குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கும்.
3. பாலை உணவுடன் சேர்த்து கொள்ளாமல் தயிர் போன்றவற்றை உணவுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
அதற்கான காரணம் பாலை தயிராக புளிக்க வைக்கும் போது அதிலுள்ள ஆன்டிஜென்ட் மூலக்கூறு உடைக்கப்படுவதனால் தயிர் உடலுக்கு நன்மை தரும் மற்றும் ஜீரணத்தை மேம்படுத்தும்.
பாலை விட தயிர் மோரில் அதிகளவு கால்சியமும் புரதங்களும் ப்ரோ பயாடிக் பண்புகளும் உண்டு, இது குடல் ஆரோக்கியத்தை பேண உதவும்.