நடிகர் அர்ஜுன் மகளுக்கு தம்பி ராமையா ஒரே ஒரு கண்டிஷன் போட்டுள்ளது தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் ஒருவர் தான் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆவார். இவர் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக மிரட்டிய நிலையில் தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகின்றார்.

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
அர்ஜுன் தொகுத்து நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி கலந்து கொண்ட போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்று இவர்களின் திருமணம் ஆஞ்சநேயர் கோவிலில் கோலகலமாக நடந்துள்ளது.
திருமணத்தை தொடர்ந்து ஜுன் 14ம் தேதி சென்னை நட்சத்திர ஹொட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இதற்கு ரஜினி, கமல், அஜித், விஜய் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தம்பி ராமையா போட்ட கண்டிஷன்
தற்போது, அர்ஜுனின் மகளும் தன் வருங்கால மருமகளுமான ஐஸ்வர்யாவிற்கு தம்பி ராமையா ஒரு கண்டீஷன் போட்டதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பின்பு, எக்காரணத்தை கொண்டும் தன்னை வளர்த்துவிட்ட சினிமாவின் பக்கம் மட்டும் போகவே கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளார்.
இந்த எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காத ஐஸ்வர்யா மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.








































