நாம் செய்யும் பாவ வினைகளுக்கு ஏற்ற வகையில் நமக்கு நன்மை தீமைகைளை தரக்கூடியவர் தான் கனி பகவான். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
சனி பகவான் இவர் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே அவரது பலன்கள் இருக்கும்.
சனி பகவானின் தாக்கம், நம்மை கடினமாக உழைக்கவும், பொறுமையாக இருக்கவும் கற்றுத்தருகிறது. அந்த வகையில் இவர் வக்ரமடையும் போது சில ராசிகளுக்கு அது நன்மை தருகின்றது.
சனியின் நட்சத்திர பெயர்ச்சி கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஏற்பட்டது. இதனால் அடுத்த 45 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு ராஜ பொற்காலம் தொடங்கும். அவை எந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.
சனி தாக்கம்
1. மிதுனம்: உங்களுக்கு சனி பகவானின் தாக்கம் பல நன்மைகளை தரப்போகிறது. அற்புமான விஷயங்களால் இந்த 45 நாட்களுக்கு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தொழில் விஷயத்தில் பலத்த லாபம் வர வாய்ப்பு உள்ளது. எந்த பதவியாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக உயர்வு கிடைக்கும்.
2. துலாம்: உச்ச பலனுக்கு சொந்தக்காரர்கள் நீங்கள். பல பயணங்களுக்கு செல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். பதவி மற்றும் சம்பள உணர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக வரும். தொழிலில் வெற்றியைத் தரும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். வாகன வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
3. மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நட்சத்திர மாற்றம் பலத்த வெற்றியைத் உங்களுக்கு தரும். முதலீடுகளால் ஆதாயம் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். எதிர்பாராத விதமாக பண ஆதாயம் பெற வாய்ப்புக்கள் அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் அதிக லாபம் உண்டாகும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
4.கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு மதத்தின் மீது அதிகமான ஆர்வம் இருக்கும். முடிவிற்கு வராமல் இருந்த அரசுப் பணிகள் முடிவடையும். பணியிடத்தில் அந்தஸ்து உயரும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறலாம். புதிய வருமான ஆதாரங்கள் விரைவாக உருவாகும். மனைவியுடன் உறவு மேம்படுவதால் மகிழ்ச்சி உண்டாகும்.








































