ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுவதன் பிரகாரம் ஒருவர் பிறக்கின்ற ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் ஆனுமை, எதிர்கால வாழ்க்கை மற்றும் சிறபியல்புகளில் தாக்கம் செலுத்துவதாக நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்யும் குணத்தை கொண்டிருப்பார்களாம்.
அப்படி உதவி செய்வதில் வல்லவர்களாக திகழும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்து பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் மற்றவர்களின் கஷ்டத்தை கண்டு நிஜமாகவே மனம் வருந்துபவர்களாகவும் இருப்பார்கள்.
தங்களை வருத்திக்கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் இவர்களிடம் இருக்கும். சுயநலம் அற்ற இவர்களின் செய்களை பார்க்கும் போது உதவி செய்வதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் போல் இருப்பார்கள்.
கடகம்
கடக ராசியினர் இயல்பாகவே மற்றவர்களின் உணர்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் குணத்தை கொண்டிருப்பார்கள்.
இவர்களிடம் யார் உதவி கேட்டாலும் அதை மறுக்க முடியாத மனம் இவர்களிடம் இருக்கும். இவர்களுக்கு தீங்கு செய்பவர்களுக்கும் உதவி செய்யும் உன்னத குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராயினர் சிறந்த ராஜ தந்திர குணம் கொண்டவர்களாகவும் அதே நேரத்தில் மிகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள்.
நீதி தவறாத குணம் கொண்ட இவர்கள் எப்போதும் மற்றவர்களின் நலனுக்காக சிந்திக்கும் குணத்தை நிச்சயம் கொண்டிருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும்.