ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகநிலைகள் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
ஒருவருடைய ராசிக்கு சாதக பலன்களை கொடுக்கும் கிரக நிலைகள் அமைந்தால் ஆண்டியும் அரசனாகலாம். இதுவே கிரக நிலைகள் சரியாக அமையாத போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.
இந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜோதிட கணிப்பின் பிரகாரம் பல அரிய கிரகளின் சேர்க்கையால் நிகழவுள்ளது.
குறிப்பாக வியாழன் மற்றும் சுக்கிரன் இணைவதால், மங்களகரமான கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகும் இதனால் 2025 இல் குறிப்பிட்ட சில ராசியினருக்கு ராஜ வாழ்க்கை அமையும்.
அப்படி வாழ்வில் அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்பட்டு ராஜ யோகத்தை முழுமையாக அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 இல் கஜலக்ஷ்மி ராஜயோகத்தால் நிதி ரீதியாக அசுர வளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. புதிய வருமானத்துக்கான வழிகள் திறக்கப்படும்.
இந்த கிரக இணைப்பு தொழில் புரிவர்களுக்கு பதிவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை கொடுக்கும். அதுபோல் வியாபாரிகளுகும் மிகப்பெரும் லாபத்தை ஈட்டிக்கொடுக்கும்.
துலாம்
சுக்கிரனால் ஆளப்படும் துலா ராசிக்காரர்கள், வாழ்வில் இந்த கிரகங்களின் இணைப்பு பொற்காலமாக அமையும். பல வழிகளிலும் பணவரவு சீராக இருக்கும்.
இவர்கள் வாழ்வில் ராஜ வாழ்க்கை வாழும் வாய்ப்பு இந்த காலப்பகுதியில் நிச்சயம் அமையும். கடன் தொல்லைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மீனம்
குருபகவானின் ஆதிக்கம் நிறைந்த மீன ராசிக்காரர்களுக்கு இந்த கஜலக்ஷ்மி ராஜயோகத்தால் எதிர்பாராத அளவுக்கு அமோகமான நன்மைகள் கிடைக்கும்.
இந்த கிரக இணைப்பு மீன ராசிகாரர்களின் நீண்ட நாள் நிதி பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கொடுக்கும். பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வழிகள் திறக்கும். மொத்ததில் 2025 இல் ராஜ வாழ்ககை வாழப்போகின்றார்கள்.








































