இந்து கலாச்சாரத்தில் மனிதர்களின் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் பெயர்ச்சிகள் பார்ப்பது வழக்கம். கிரகப்பெயர்ச்சி என்பது ஒவ்வொரு கிரகங்களின் அடிப்படையில் மாற்றம் பெற்று வரும்.
இதனால் உண்டாகும் நல்லதையும் தீமையையும் ஒரு சில ராசிகள் பெற்றுக்கொள்வார்கள். இந்த நிலையில் தற்போது டிசம்பர் 7ம் திகதி முதல் செவ்வாய் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
இது செவ்வாய் பகவானின் வக்ர நிலையாகும். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு 80 நாட்களுக்கு துன்பம் நடைபெறப்போகிறது. அந்த துன்பத்தை பெறப்போகும் ராசிகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
செவ்வாயின் மாற்றத்தால் உங்கள் முன்னேற்றம் கொஞ்சம் குறைவாகவே காணப்படும்.
வேலையில் பிரச்சனை மனதில் விரக்தி உணர்வு வரக்கூடும்.
இந்த நேரத்தில் பொறுமையாக இருப்பது அவசியம் கோபத்தை தவிர்த்தால் நல்லது.
தேவையில்லாமல் பேசவும் கூடாது.
மகரம்
செவ்வாயின் மாற்றம் உங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும்.
இன்றிலிருந்து 80 நாட்களுக்கு பணவிஷயத்தில் தலையிட கூடாது.
உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகளவில் வரும்.
உங்கள் பேச்சில் ஆக்ரோஷம் இருப்பதால் அதுவே உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
துலாம்
ராசியினருக்கு செலவுகள் அதிகரிக்கும்.
தேவையில்லாத பயணம் மேற்கொள்ள நேரிடும்.
அதிகமாக கோபப்படும் சந்தர்ப்பம் வரும். எனவே கேபத்தை முடிந்தவரை கட்டுப்படுத்துங்கள்.
தொழிலில் லாபம் குறைவாகும் ஆனால் எப்போதும் மனதை தளர விட கூடாது.
தந்தையுடன் வாக்குவாதம் செய்ய நேரிடும்.
குடும்பத்தில் உங்களால் பணப்பிரச்சனை வரும்.








































