திமிங்கில வாந்தி அல்லது அம்பர்கிரிஸ் (Ambergris) எனப்படுவது திமிங்கிலத்தின் செரிமான உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள்.
இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். நடுக்கடலில் வாழும் திமிங்கிலங்கள் மிகவும் அரிதான மீன்களை சாப்பிட்ட பிறகு சில மீன்கள் சரியாக சமிப்பாடு அடையாமல் திமிங்கிலத்தின் குடல் பகுதிலேயே தங்கி ஒரு பெரிய பந்து போல் உருவாகும்.
இந்த எச்சத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு திமிங்கிலம் வாந்தியாக வெளியேற்றும். குறிப்பாக, திமிங்கிலம் தனக்கு பிடித்த Cuttlefish எனப்படும் கணவாய் மீன்கள், ஆக்டோபஸ்களை வேட்டையாடி விழுங்கும்போது, அந்த மீன்களின் கூறிய உறுப்புகள், முட்கள் மற்றும் பற்களால் திமிங்கலத்தின் உள் உறுப்புகளில் காயம் ஏற்படவும், செரிமான பிரச்சனையும் ஏற்படவும் வாய்ப்பு காணப்படுகின்றது.
அதனை தடுப்பதற்காக இயற்கையிலேயே கொடுக்கப்பட்ட ஒரு தற்காப்பு கவசம்தான் அம்பர்கிரிஸ் எனப்படும் மெழுகுபோன்ற திரவம்.
சிலசமயம் திமிங்கிலங்கள், வாந்தியெடுப்பதன் மூலம் அம்பேர்க்ரிஸ் வெளியேற்றுகிறது. சில திமிங்கிலங்கள், மலப்புழை வழியாகவும் இதை வெளியேற்றுகிறது.
கோடிகளில் விலைபோக காரணம்?
இந்த திமிங்கிலத்தின் வாந்தியானது ஆரம்த்தில் துர்நாற்றம் வீசக்கூடியதாக இருக்கும். ஆனால் நேரம் செல்லும் போது வாசனை பொருளாக மாறுகின்றது.
ஆடம்பர வாசனை திரவியங்கள் தயாரிக்க மிகவும் முக்கியமானதாக காணப்படுகின்றது. மேலும் பாலியல் மருந்துகள் தயாரிப்பிலும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தயாரிப்பிலும் அம்பேர்க்ரிஸ் முக்கிய இடம் வகிக்கின்றது.
அதன் காரணமாக இதன் விலையும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகமாக காணப்படுகின்றது.
இவை மிகவும் அரிதாகவே கிடைக்கும் என்பதால் ஒரு கிலோ அம்பர்கிரிஸூன் விலை மதிப்பு சர்வதேச சந்தையில் 1 கோடியில் இருந்து 1.5 கோடிகள் வரையில் வர்த்தகமாகின்றது.