ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கின்ற ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் சிறப்பு குணங்களுடன் மிகவும் நெருக்கமான வகையில் தொடர்பு கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே சிறந்த தலைமைத்துவ பண்புகளை கொண்டிருப்பார்களாம்.
பெம்பாலும் இந்த ராசியினர் தான் எதிர்காலத்தில் உலகின் தலைசிறந்த தலைவர்களாக மாறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அப்படிபட்ட யோகம் கொண்ட ராசியினர் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை புரிந்துக்கொள்ளும் ஆளுமையும் அதீத கற்பனை வளமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு இயல்பாகவே சிறந்த பேச்சாற்றல் இருக்கும். இவர்கள் தங்களின் பேச்சால் எளிதில் மற்றவர்களை கவர்ந்துவிடுவார்கள்.
பிறப்பிலே இவர்களுக்கு ஆளும் குணம் இருக்கும். அதனால் எதிர்காலத்தில் பெரிய குழுவிற்கு தலைமை வகிப்பவர்களாக மாறுவார்கள்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் தேவைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு மற்றவர்கள் மீது காணப்படும் அதிக அக்கறை இவர்களை சிறந்த தலைவர்களாக மாற்றுகின்றது.
இவர்கள் மற்றவர்களை எளிதில் வசீகரிக்கும் அழகிய தோற்றத்தையும் சிறந்த தலைமைத்துவ குணங்களையும் கொண்டிருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசியினர் உலகில் சமநிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். உலகில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
மற்றவர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் தைரியம் துலாம் ராசியினரிடம் இயல்பாகவே இருக்கும்.
மற்றவர்களின் கஷ்டங்களை சொல்லாமலேயே புரிந்துக்கொள்ளும் இவர்களின் நல்ல குணம் இவர்களை பெரிய தலைவனாக மாற்றுகின்றது.