ஒளிரும் மென்மையான சருமம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சருமம் இப்படி வருவதற்காக ஒவ்வொருவரும் பல ஆயிரங்களை செலவு செய்து வருகின்றனர். இன்றைய அவசர கால சூழ்நிலையில் நாம் தினம் தினம் வெளியில் செல்ல நேரிடும்.
இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வறட்சி போன்ற பிரச்சினைகள் வருகிறது. இவை முகத்தின் பொலிவைக் குறைக்கும். இவற்றை நாம் எளிதான முறையில் கடலை தாவு வைத்து போக்க முடியும்.
அனால் இதற்கு கடலை மாவு மட்டும் போதாது. அதனுடன் சில பொருட்களை சேர்க்கும் போது தான் அது முகப்பொலிவை அதிகப்டுத்தும். அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கடலை மாவு
கடலை மாவு & தயிர்: 2 ஸ்பூன் கடலை மாவு, 1 தயிர் மற்றும் 1/2 எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ் ஃபெக் முகத்தில் பொலிவை கொண்ட வர உதவும்.
கடலை மாவு & மஞ்சள்: 2 ஸ்பூன் கடலை மாவு, 1/4 ஸ்பூன் மஞ்சள் மற்றும் சிறிதளவு தண்ணீர் கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, சுமார் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கடலை தாவுடன் மஞ்சள் சேர்க்கும் போது அது முகத்தை பொலிவாக்குவதடன் முகத்தில் உள்ள பருக்கள் நிக்கி பொலிவை இன்னும் அதிகப்படுத்தும்.
கடலை மாவு & ரோஸ் வாட்டர்: 2 ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1-2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த பேஸ் முகத்திற்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுப்பதுடன் ஈரப்பதத்தையும் கொடுக்கும்.
கடலை மாவு & தேன்: கடலை மாவு மற்றும் தேன் ஃபேஸ் பேக் சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றும். மேலும், முகத்தை பளபளப்பாக்கும் மற்றும் கறைகளை நீக்கவும்.
இதற்கு 2 ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.