நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடிய சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், மார்ச் 28, 2025 அன்று, சனி பகவான் மீன ராசிக்குள் நுழைகிறார்.
ஏற்கனவே அங்கு சுக்கிர பகவான் இருக்கும் நிலையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் சனி – சுக்கிரன் சேர்க்கை நிகழப்போகிறது.
இதனால் குறிப்பிட்ட நான்கு ராசிகள் அதிக பலன்களை அடைய போகின்றனர்.
ரிஷபம்
நீண்ட நாளாக தடைப்பட்ட வேலைகள் இனிதே முடியும்.
உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
சமுதாயத்தில் மரியாதை கூடும்.
நிதி ஆதாயம் அதிகரிக்கும்
திருமண யோகம் கைகூடும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
மீனம்
அதிக நன்மைகள் உண்டாகும்.
நீண்ட நாள்களாக தடைபட்ட வேலைகள் முடிவடையும்.
அரசு வேலைக்கு தங்களை தயார்படுத்தி கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்தடையும்.
பண வரவு அதிகரிக்கும்.
கும்பம்
அதிக நன்மைகள் கிடைக்கும்.
வாழ்க்கையில் நீண்ட நாள்களாக நிலவி வந்த பிரச்சினைகள் விலகும்.
சமுதாயத்தில் மரியாதை கூடும்.
நிதி வருவாய்க்கான ஆதாயங்கள் பெருகும்.
வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.
எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
பணவரவு அதிகரிக்கும்.
மகரம்
இல்லங்களில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
புதிய வருமானத்திற்கான ஆதாயம் உருவாகும்.
வாழ்க்கையில் எல்லா வழிகளிலும் வெற்றி கிடைக்கும்.








































