பொதுவாகவே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் தற்காலத்தில் அதிகரித்த துரித உணவுகளின் நுகர்வு, மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி வேலை செய்வது மற்றும் பல்வேறுப்பட்ட வாழ்க்கைமுறை பழக்கங்களால், பெரும்பாலானவர்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர்.
இங்கிலாந்து பெண்மணியான ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்ஸர் ஜெஸ் தனது 105 கிலோ எடையில் இருந்து வெற்றிகரமாக 52 கிலோ எடையை குறைத்துள்ளார்.
இந்த நிலையை அடைவதற்கு ஜெஸ் பின்பற்றிய எடை இழப்பு உத்திகளை தொடர்பில் குறிப்பிட்டு அவர் அண்மையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவென்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பின்பற்றியதாக கூறும் முக்கியமான எடையிழப்பு உத்திகள் என்னென்ன என்பது தொடர்பில் விளக்கமாக பார்க்கலாம்.
முக்கிய எடை இழப்பு உத்திகள்
ஒவ்வொரு உணவிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஊட்டச்சத்து நிறைவாக கிடைக்கின்றது. ஆனால் அடர்த்தி மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன, அவை கலோரி பற்றாக்குறையில் இருக்கும் போது முழுமையாகவும் திருப்தியாகவும் உணருவதற்கு துணைப்புரிகின்றது என ஜெஸ் குறிப்பிடுகின்றார்.
உங்கள் தினசரி நடவடிக்கைகளை அதிகரிக்க எடை இழப்பு பயணத்தின் போது ஒரு நாளைக்கு 10,000 முதல் 13,000 steps வரையில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றார்.
கலோரிகளை எரிப்பதிலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் வழக்கமான இயக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாரத்திற்கு 3-4 முறை உடற்பயிற்சி செய்யவும் ஆரம்பத்தில், ஜெஸ் வீட்டிலேயே HIIT உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தியுள்ளார்.
ஆனால் பின்னர் தசையை வளர்ப்பதற்கும் தளர்வான சருமத்தைத் தவிர்ப்பதற்கும் வலிமை பயிற்சி முக்கியமானது என்பதை புரிந்துக்கொண்டு அதனை பின்பற்றியுள்ளார்.
சிறந்த உடல் அமைப்புக்காக வாரத்திற்கு 3-4 முறை வலிமை பயிற்சியை செய்ய பரிந்துரைத்துள்ளார்.
உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு எப்போதும் அதிக நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் தேவையற்ற சிற்றுண்டிகளை கட்டுப்படுத்தலாம்.
கூடுதல் கலோரிகள் இல்லாமல் உற்சாகமாக இருக்க தேநீர் அல்லது கருப்பு காபியைத் தேர்வுசெய்யவும் ஜெஸ் பரிந்துரைக்கிறார்.
உணவில் புரதத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். புரோட்டீன் நிறைந்த உணவு உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கும் மற்றும் தசைகளை மீட்டெடுக்க உதவுகிறது.
புரதச் செரிமானம் கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை விட அதிக கலோரிகளை எரிக்கிறது என்று ஜெஸ் குறிப்பிடுகிறார், இது எடை இழப்புத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
நிலையான வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கியம் கடுமையான மாற்றங்களைச் செய்வதற்கு முன், உங்கள் தற்போதைய செயல்பாட்டு நிலைகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஜெஸ் அறிவுறுத்துகிறார்.
தீவிர உடற்தகுதி விதிமுறைகளுக்குள் செல்வதற்கு பதிலாக, சோர்வைத் தவிர்க்க சிறிய, நிர்வகிக்கக்கூடிய மாற்றங்களைச் செய்தாலே போதும் என ஜெஸ் குறிப்பிடுகின்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்த உத்திகள் நடைமுறைக்குரியவை என்றாலும், ஒவ்வொருவரின் உடல் நிலைகளும் வேறுப்பட்டவை எனவே, எந்தவொரு எடை இழப்பு பயணத்தையும் தொடங்குவதற்கு முன்னர் முறையான ஒரு மருத்துவரை அணுகுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.