பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தோற்றம், குணங்கள், பழக்கவக்கங்கள், திறமைகள் என பல்வேறு வகைகளிலும் வேறுபாடு காணப்படுவது இயல்பான விடயம் தான்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்பகளின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆளுமையில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலான நேரங்களில் தவறாகத்தான் இருக்குமாம்.
அப்படி அடிக்கடி முடிவெடுக்கும் விடயத்தில் கோட்டைவிட்டு, பின்னர் நினைத்து வருத்தப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் ராஜ தந்திரத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு விடயம் குறித்து பல கோணங்களில் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பதால், பல நேரங்களில் ஒரு சரியான முடிவை எடுப்பது சவாலான விடயமாக இருக்கும்.
இவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற விடயம் குறித்து தீவிரமான இருப்பதால், தவறான முடிவு தோல்விக்கு காரணமாகிவிடும் என்ற பயத்தால், முடிவெடுப்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள்.
அவர்களின் இந்த மிகை சிந்தனை காரணமாக வாழ்வில் கிடைக்கும் அருமையான வாய்புகளை இழந்துவிடும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்பகளாக இருப்பார்கள்.
இவர்கள் அதிகமாக கற்பனை செய்துக்கொள்ளும் குணம் கொண்டவர்கள் என்பதால், சரியா முடிவுகளை எடுப்பது இவர்களுக்கு சற்று சற்று சவாலான விடயமாக இருக்கும்.
இந்த ராசியினரின் உள்ளுணர்வு வலுவானதாக இருக்கலாம், ஆனால் அது எப்போதும் நம்பகத்தன்மை கொண்டதாக இருப்பதில்லை.
இவர்களின் முடிவுகளில் உணர்வுகளின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால், பெரும்பாலான நேரங்களில் இவர்களின் முடிவுகள் தவறாகிவிடுகின்றது.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.உள்ளுணர்வுகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்திவிட கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
ஆனால் இதே குணங்கள் இவர்களை முடிவெடுக்க முடியாதவர்களாகவும் பலவீனம் கொண்டவர்களாகவும் மாற்றிவிட வாய்ப்பு காணப்படுகின்றது.
அவர்கள் மனதில் எப்போதும் பல்வேறு விடயங்களை மனதில் போட்டு குழப்பிக்கொண்டே இருப்பதால் , ஒரு விஷயத்தில் உறுதியான முடிவை எடுக்க முடியாத நிலை காணப்படும்.








































