நடிகை சிம்ரன் பிரசவத்திற்கு பின் 94 கிலோ எடையை எப்படி குறைத்தார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
சிம்ரன்
தமிழ் சினிமாவில் “இடுப்பழகி” என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை தான் சிம்ரன்.
இவர், 90-களில் பலரது கனவுக் கன்னியாக இருந்தாலும், இன்று வரை அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ளார். தமிழில் சிம்ரன் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களில் வெற்றிப் படங்களாக மாறியுள்ளது.
இதற்கிடையில் சிம்ரன் திருமணம் செய்த பின்னர் பெரிதாக படங்களில் நடக்காமல் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இவருக்கு தற்போது இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், மகன்கள் வளர்ந்த பின்னர் சினிமாவில் கம்பேக் கொடுத்த சிம்ரன் திருமணத்திற்கு முன்னர் எப்படி சிக்கென்று இருந்தாரோ அதே போன்று தான் தற்போது இருக்கிறார்.
94 கிலோவை எப்படி குறைத்தார்?
இது குறித்து பேட்டியொன்றில் கேட்டப்பட்ட போது, “ முதல் குழந்தை பிறந்த போது வழக்கமாக உள்ள எடையை விட 30 கிலோ அதிகமாக இருந்தேன். அதன் பின்னர் பழைய உடலமைப்பை பெற்றேன்.
இதனை தொடர்ந்து இரண்டாவது மகன் பிறக்கும் பொழுது 35 கிலோ எடை அதிகரித்து இருந்தது. தற்போது அதையும் குறைத்து விட்டேன்..” என்றார். இதற்கான காரணத்தையும் பகிர்ந்திருந்தார். எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் வேண்டும் என்றால் டிப்ஸ்களை பின்பற்றலாம்.
அதாவது, “ பிரசவத்திற்கு பின்னர், பழைய உடலமைப்பைப் பெற பல ஆண்டுகள் ஆனாலும் கடுமையாக உழைத்தேன். குழந்தைகள் பிறந்த பின்னர், நான் 94 கிலோ வந்துவிட்டேன். 94 கிலோ எடையைக் குறைப்பது மிக சவாலாக இருந்தது. இந்த எடையை படிப்படியாகவே குறைக்க முடிந்தது. 6-7 ஆண்டுகள் கடுமையாக முயற்சித்து உடலில் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்க உடற்பயிற்சி செய்தேன்.
உடலை சிக்கென்று மாற்ற தினமும் தவறாமல் ஜிம் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவேன். தினமும் 1-2 மணிநேரம் ஜிம் செய்த பின்னர், ட்ரெட்மில்லில் வாக்கிங் செய்தல், வெயிட் லிஃப்டிங் செய்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் செய்வேன்.
தற்போது 49 வயதிலும் தனது எடையையும், இடையையும் சரியாக பராமரிக்க ட்விட்ஸ்ட் உடற்பயிற்சி அவசியம். தினமும் 150 முறை தவறாமல் செய்ய வேண்டும். அப்போது தான் உடலமைப்பு அழகாக இருக்கும்..” எனக் கூறியுள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.








































