குரு ஞானம், கல்வி, வேலை, செல்வம், திருமணம், தானம் போன்றவற்றின் காரண கர்தாவாக திகழ்கிறார். குரு பகவான் சனி கிரகத்தை விட தனது பயணத்தை மெதுவாக கொண்டு செல்வார்.
இந்த நிலையில் குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி மே பதினொன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் மாறுகிறார்.
மே 14 ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார். இந்த பெயர்ச்சியால் பல ராசிகள் பல அதிஷ்டங்களை அனுபவிக்ப்போகின்றது அத பற்றி இங்கு பார்க்கலாம்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு பணம், குடும்பம் மற்றும் பேச்சு போன்றவற்றுடன் குரு இரண்டாம் இடத்தில் பெயர்ச்சி அடைந்து வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புகளைத் தருவார்.
நிதி நிரமையில் இருந்த அனைத்து பிரச்சனையும் நீங்கும்.
வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
நீங்கள் ஒரு விடயத்தில் போடும் மூலதனம் பல லாபத்தை தேடி தரும்.
குடும்ப நிலைமைகள் மேம்படும்.
சொந்த வீடு வாங்கும் கனவு நிச்சயம் நனவாகும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு வருமான வளர்ச்சி, முன்னேற்றம், பிரபலங்களுடனான நட்பு, பதவி உயர்வு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான 11 ஆவது வீட்டில் குரு பகவான் பெயர்ச்சி அடைக்கிறார்.
இதனால் உங்கள் வழியில் வரும் அனைத்தும் தங்கமாக மாறும்.
திடீர் நிதி ஆதாயம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
மனதில் உள்ள பெரும்பாலான ஆசைகளும் நம்பிக்கைகளும் நிறைவேறும்.
உயர் பதவியில் இருப்பவர்களுடன் நெருங்கிய உறவுகள் உருவாகும்.
வருமான ஆதாரங்கள் விரிவடையும்.
உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
குரு மாற்றம் காரணமாக துலாம் ராசியினர் வேலையில் விரும்பிய அங்கீகாரத்தையும், பதவி உயர்வையும் பெறுவீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிகமான லாபம் வந்து சேரும்.
தந்தை வழியாக பரம்பரை சொத்து கைக்கு கிடைக்கும்.
உங்கள் ஆன்மீகத்தின் வழிபாட்டு ஆசை நிறைவேறும்.
திறமைகளை நன்கு வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் தேடி வரும் தவற விடாதீர்கள்.
நினைத்த காரியங்கள் ஒன்று ஒன்றாக நடக்கும்.








































