கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (26) அதிகாலை 4.30 மணிக்கு ஓமந்தைப் பகுதியில் இந்த விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
காரில் பயணித்த மூன்று பயணிகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
காரின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காரில் பயணம் செய்துள்ளனர், மேலும் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத்துணைத் துாதரகத்தில் பணியாற்றும் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.
காயமடைந்தவர்களில் யாழ் பல்கலை இராமநாதன் நுண்கலைப்பீட நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் உட்பட இருவர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஓமந்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








































