யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்று கூறப்படும், கேரளாவின் பிரபல ரெப் பாடகரான வேடன் என்ற ஹிரந்தாஸ் முரளியின் பாடலொன்று, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவரின் மகனான வேடன், மலையாள கலைத்துறையில் பிரபலமான ரெப் இசைப் பாடகராக உள்ளார்.
பாடத்திட்டத்தில் இணைந்த பாடல்
அவரின் பாடல்கள், சாதி மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு எதிரானதாக உள்ளன.
இந்தநிலையில், வேடனின் பாடல்களில் ஒன்றான ‘பூமி ஞ்யான் வாழுன்ன இடம்’ எனும் பாடல், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாள பட்டப்படிப்பின் ஒப்பீட்டு இலக்கியத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடலின் வரிகள், பாடிய விதம் மற்றும் ஆடல்கள் என்பன மாணவர்களின் பாடத்திட்டமாக அமையும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பாடத்திட்டத்தில், பிரபல பொப் பாடகர் மறைந்த மைக்கல் ஜெக்சனின் “They Don’t Care About Us” எனும் பாடலுடன் வேடனின் பாடல் ஒப்பிடப்பட்டுள்ளது.








































