இந்தியாவின் ஒடிசா மாநிலம் பெர்ஹம்பூரில் உள்ள கோபால்பூர் கடற்கரைக்கு காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி 10 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி மாணவி ஒருவரும் தன்னுடன் அதே கல்லூரியில் படிக்கும் தனது காதனுடன் இரவு கடற்கரைக்கு சென்றிருந்த போது இருவரும் தனிமையான இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அந்த சமயத்தில் அங்கு 10 பேர் கும்பல் வந்தனர்.
திடீரென அவர்கள் மாணவியின் காதலனை பிடித்து வைத்துக்கொண்டு, மாணவியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்து விட்டு ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணவியும், அவரது காதலனும் கோபால்பூர் பொலிஸ் நிலையம் சென்று முறைபாடு கொடுத்த போது பொலிசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் அம்மாநில உள்துறை வெளியிட்ட குற்றங்கள் குறித்த அறிக்கையின்படி,
2023ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024ம் ஆண்டு ஒடிசாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








































