Loading...
வயலில் வைரக்கல் கிடைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைரம் கண்டெடுப்பு
ஆந்திரா, பெண்டேகல்லு கிராமத்தில் ஒரு பெண் தொழிலாளி விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 15 காரட் வைரம் வயலில் கிடந்துள்ளது.

Loading...
அதனை பார்த்து எடுத்த பெண், வைரம் என தெரிந்ததும் மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்த தகவல் கிராம மக்களிடம் பரவியுள்ளது. தொடர்ந்து பலரும் அவர்களது விவசாய நிலத்தில் தூர்வார தொடங்கியுள்ளனர்.
தொடர் சம்பவம்
இந்நிலையில் அதிகாரிகள் வைரத்தை பறிமுதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருப்பினும் வயலில் கிடைத்த வைரம் 2கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆந்திராவில் விவசாய நிலங்களில் தொடர்ந்து அவ்வப்போது வைரம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Loading...








































