முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் நெருங்கிய அரசியல் கூட்டாளியான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே. புஷ்பகுமார் என்கிற இனியபாரதியின் வீட்டில் குற்றபுலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை – கல்முனைப் பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான ஒரு வீடு மற்றும் அலுவலகம் நேற்று (26) குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டுள்ளது.

விசாரணை நடவடிக்கை
இனியபாரதியும் அவரது ஆதரவாளர்களில் ஒருவரும் கடந்த 6ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2005 மற்றும் 2008க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக நீண்ட விசாரணை நடத்திய பின்னர், திருக்கோவில் மற்றும் சந்திவெளி பகுதிகளில் இந்தக் கைதுகள் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய கருணா பிரிவின் திருக்கோவில் பகுதியில் உள்ள ஆயுதமேந்திய முகாமின் தலைவராக இனியபாரதி பணியாற்றினார்.








































