எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது என சம்யுக்தா ஓப்பனாக பேசியுள்ளார்.
நடிகை சம்யுக்தா
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா மேனன். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் சம்யுக்தா, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சம்யுக்தா மேனன்,
மனஅழுத்தம்
“ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை முறை இருக்கிறது, எனக்கும் அது இருக்கிறது. எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை.
ஆனால், சில சமயம் மனஅழுத்தம் அதிகமாகும்போது அதைச் சமாளிக்க மிகக் குறைந்த அளவு வைன் எடுத்துக்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.








































