கிளிநொச்சியில் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் சோதனை நடத்தச் சென்ற பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் 5 ஆண் மற்றும் 5 பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் பொலிஸ் பிரிவின் சுடலகுளம் பகுதியில் அதிகாரிகள் குழு சட்டவிரோத மதுபான சோதனையை நடத்தி ஒரு சந்தேக நபரைக் கைது செய்தனர்.
பொலிஸார் மீது கடும் தாக்குதல்
இதன் போது, இரும்பு கம்பிகள் மற்றும் தடிகளை கொண்ட குழு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி, சந்தேக நபரை விடுவித்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது.
அதற்கமைய, ராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு, அதிகாரிகளைத் தாக்கியதற்காக இந்தக் குழுவை கைது செய்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இரண்டு பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16 முதல் 32 வயதுக்குட்பட்டவர்களாகும்.
பெண் சந்தேக நபர்கள் 26 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்களாகும். அவர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.








































