Loading...
வடபகுதி கடற்பகுதியில் நேற்று இரவு முதல் இன்று(03.11.2025) காலை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்கள், சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டவர்கள் மற்றும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சட்டவிரோத பயணங்களை மேற்கொண்டவர்கள் இதில் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Loading...
இந்தியாவில் இருந்து மன்னாருக்கு
எனினும் இதில் எத்தனை பேர், இந்திய கடற்றொழிலாளர்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
அதேநேரம் இந்தியாவில் இருந்து மன்னாருக்கு சட்டவிரோத படகில் வந்தபோது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்களால் கூறப்பட்ட மன்னார் வர்த்தகர் ஒருவர் இந்த 35 பேரில் உள்ளடங்குகிறாரா என்ற தகவலையும் ஆராய்வதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது
Loading...








































