Loading...
சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸை சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Loading...
உயிரிழந்தவர் மொரட்டுவ, சொய்சாபுர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மரணம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.
தீவிபத்திற்கான காரணம் இன்றுவரை இனங்காணப்படாத நிலையில், கல்கிஸை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...








































