Loading...
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா (Tonga) நாட்டின் கடலுக்கடியில் இருந்த எரிமலை வெடித்துச் சிதறியதால் அந்த நாட்டை ஆழிப்பேரலை தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் அங்குள்ள மக்கள் உயரமான பகுதிகளை நோக்கி முண்டியடித்துச் சென்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
Loading...
மிகப்பெரிய வெடிப்புக்கு முன்னதாக, எரிமலை பல நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. சில பகுதிகளில் கந்தகம் மற்றும் அமோனியா வாசனை வீசுவதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
டோங்கா முழுவதும் 80,000 பேர் வரை எரிமலை வெடிப்பு, ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த கேத்தி க்ரீன்வுட் (Kathy Greenwood) தெரிவித்துள்ளார்.
Loading...








































