Loading...
இலங்கையில் கொவிட் தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர், கொவிட் ஒருங்கிணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
இதேவேளை, வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் தேவைப்படுகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 8 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Loading...
இந்நிலையில், மக்கள் சுகாதார விதிகளை கடைப்பிடிப்பதும், முன்னெப்போதையும் விட கவனமாக இருப்பதும் அவசியம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading...








































