Loading...
கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளில் அமுலிலுள்ள நடைமுறைகளை இலங்கையிலும் செயற்படுத்த அரசாங்கம் சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய இலங்கையில் மூன்றாவது கோவிட் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
Loading...
இதற்கான சட்டத்தன்மை குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டிருப்பதாக, சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
Loading...








































