கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெற்பேலி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்தை முற்றுகையிட்ட இராணுவத்தினர் உழவு இயந்திரத்தை வழிமறித்துள்ளனர். எனினும், சாரதி நிறுத்தாமல் தப்பியோடினார்.
உழவு இயந்திரத்தின் மீது இராணுவத்தால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. உழவு இயந்திர சக்கரத்தில் 6 தோட்டாக்கள் பாய்ந்திருந்தன. சாரதி உழவு இயந்திரத்தை நிறுத்தி விட்டார். அவரை கைது செய்த இராணுவத்தினர், கொடிகாமம் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கொடிகாமம், பாலாவியை சேர்ந்த குலசேகரன் டெசிகரன் (25) என்ற இளைஞனே கைது செய்யப்பட்டார். கொடிகாமம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.










































