Loading...
ஹட்டன் – டிக்கோயா தரவளை பகுதியில் ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பட்டல்கலை பகுதியில் இன்று(28) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது, குறித்த பேருந்தில் 17 பேர் பயணித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Loading...
விபத்துக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாத நிலையில், காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
Loading...








































