Loading...
பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர் துலான் சமீர சம்பத் எனப்படும் அபா விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவ எகொடஉயன பிரதேசத்தில் வீடொன்றில் மறைந்திருந்த சந்தேக நபரை கைது செய்ய முயற்சித்த போது இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Loading...
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
டுபாயிலிருந்து போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாணந்துறை சலிந்து என்பவரின் பிரதான சகவாக அபா செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பில் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Loading...








































