தமிழ் மொழியில் உங்கள் முன் என்னால் பேச முடியாதமைக்காக நான் வெட்கப்படுகிறேன். அதில் என்னுடைய பிழையில்லை. அரசியல் பொறிமுறையிலுள்ள பிழை. இதனை நாம் நிவர்த்தி செய்ய வேண்டுமென ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுக்கும் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்திலேயே 05 பிராந்திய பத்திரிகைகள் உள்ளன. அதனால் இங்கே பல பிராந்திய ஊடகவியலாளர்களும் உள்ளதாக அறிகிறேன்.
ஊடகவியலாளர்களின் கல்வித் தகமைகளை மேம்படுத்தும் வகையில், பட்டயக்கல்வியை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். அதன்போது பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.








































