Loading...
பெந்தோட்டை கடற்கரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முச்சக்கரவண்டியின் பின்புற ஆசனத்திலிருந்து குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
Loading...
உயிரிழந்த நிலையிலிருந்தவர் 40 அல்லது 45 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
பெந்தோட்டை கடற்கரைக்கு அருகில் தொடருந்து பாதைக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் இந்த முச்சக்கரவண்டி நிறுத்தப்பட்டிருந்ததாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...








































