Loading...
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
றத்மலை பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற காருமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
Loading...
இவ்விபத்து இன்று (01) காலை 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-அன்புவழிபுரம் சதா சகாய மாதா ஆலய பங்கு தந்தையான கனேஷபிள்ளை நிதிதாசன் (49வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...








































