Loading...
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய அரச எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.
ஆளுங்கூட்டணியின் தலைமைக் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் அண்மையில் பெருமெடுப்பில் நடத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற மைதானத்திலேயே எதிரணியின் கூட்டமும் நடத்தப்படவுள்ளது.
Loading...
அரசின் பரப்புரைக் கூட்டத்துக்குப் பதிலடி கொடுக்கும் முகமாகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு, மின்சார நெருக்கடி, உரப் பிரச்சினை உட்பட மேலும் பல விடயங்களை முன்னிறுத்தியே போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...








































