ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சர்களை அழைத்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி வருவதாக தெரியவருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கம் வகிக்கும் அமைச்சர்களை மாத்திரம் அழைத்து ஜனாதிபதி இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதனடிப்படையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவங்ச, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடும் முடிவு ஒன்றை எடுப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களை மாத்திரம் அழைத்து இந்த கலந்துரையாடலை நடத்த திட்டமிட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.








































