Loading...
போக்குவரத்து இராஜாங்க அமைச்சராகவுள்ள திலும் அமுனுகம, போக்குவரத்து அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று(வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
போக்குவரத்து அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாராச்சி நேற்று மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
Loading...
அமைச்சுக்களில் நேற்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, வனவிலங்கு அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவும் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Loading...








































