Loading...
உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை முதல் தடவையாக 150,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 139,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் இலங்கை சந்தையில் தங்கத்தின் அளவு வேகமாக குறைந்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading...
இதற்கிடையில், உலக சந்தையில் தங்கத்தின் விலை 1980.21 அமெரிக்க டொலர்களாக அதிகரித்ததுடன், அது மீண்டும் 1974.71. அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்தது
ரஷ்யா – உக்ரைன் யுத்தம் காரணமாக தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...








































