நாட்டில் இன்றைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வதற்கு தொடர்பான தகவலை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களிற்குட்பட்ட பகுதிகளுக்கு காலை எட்டு மணி தொடக்கம் மாலை ஆறு மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணி நேரமும், மாலை ஆறு மணி தொடக்கம் இரவு பதினொரு மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணி நேரமும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும், P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களிற்குட்பட்ட பகுதிகளுக்கு காலை எட்டு முப்பது மணி தொடக்கம் மாலை ஐந்து முப்பது மணி வரையான காலப்பகுதியில் மூன்று மணி நேரமும் மாலை ஐந்து முப்பது மணி தொடக்கம் இரவு பதினொரு மணி வரை இரண்டரை மணி நேரமும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.








































