நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த தருணத்தில், வெறுமனே தன்னால் அதை வேடிக்கை பார்க்க முடியாது என நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்க அனுப்பி வைத்துள்ள பதவி விலகல் கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தனது கடிதத்தில்,
சிறப்புரிமை மற்றும் அதிகாரம் ஆகியவற்றை கடந்து தான் எப்போதும் மனசாட்சிக்கு கட்டுப்படுபவன். அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், பொதுமக்களுக்கு உயரிய சேவைகளை வழங்கவும் தனக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியை வழங்கிய அரச தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். முதலாம் இணைப்பு
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
லான்சா கிராமப்புறசாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு துறையின் இராஜாங்க அமைச்சராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
விமல் வீரவங்க தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர, களஞ்சிய வசதிகள், கொள்கலன் மற்றும் துறைமுக விநியோக வசதிகள் மற்றும் படகுகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகிய சில நாட்களுக்குப் பின்னரே பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.










































