5 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கப்பல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யு கே.எம் வேகப்பிட்டிய இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் இதற்கான நாணயக் கடிதத்தினை விடுவிக்குமாறு விநியோகஸ்தர்கள் தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, நாணயக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, அரச உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் அவ் தெரிவித்துள்ளார்.
எனினும், எரிவாயுவை இறக்குவதற்கான கட்டணத்திற்காக அரச வங்கியொன்றினால் 4.9 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நாணயக் கடிதத்தினை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், குறித்த கப்பல் திருப்பியனுப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவை நுகர்வோருக்கு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








































