Loading...
மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ” நாம் புத்துயிர் பெற வேண்டியது நமக்கு மட்டும் முக்கியம் அல்ல. அது நமது ஜனநாயகம் மற்றும் சமூகத்திற்கு அவசியம்.
Loading...
மக்களை பிரித்தாளும் கொள்கையில் ஆளுங்கட்சியும், அதன் தலைவர்களும் மாநிலத்திற்கு மாநிலம் செய்து வருகின்றனர். வரலாறு சிதைக்கப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக நமது பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை நிலைநிறுத்தி வளப்படுத்திய நல்லிணக்கத்தை சேதப்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என அவர் கூறியுள்ளார்.
Loading...








































