Loading...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்யப்படாதென இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.
குறித்த பணம் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Loading...
அத்தியாவசிய இறக்குமதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு வாழ் இலங்கையர்கள் நாட்டிற்கு உதவுமாறும் அந்த பணம் தேவையற்ற முறையில் பயன்படுத்தடாதென அவர் வாக்குறுதியளித்துள்ளார்.
Loading...








































