Loading...
அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று 09 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
Loading...
ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை, காலிமுகத்திடலில் போராட்டம் இடம்பெறும் பகுதியில் நேற்று விளக்குகளால் ‘‘Go Home Gota’’ என அலங்கரிக்கப்பட்டு வேண்டுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது .
Loading...








































