சஹ்ரான் ஹாசீம் பயன்படுத்திய வாகனத்தை தான் பயன்படுத்தவில்லை என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாக்குதலை நடத்திய பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் Toyota Land Cruiser V8 என்ற வாகனத்தை பயன்படுத்தியிருந்தார்.
குறித்த வாகனத்தை சரத் வீரசேகரவும் பயன்படுத்தியாதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.
நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் குறித்த வாகனத்தை அமைச்சர் ஒருவர் பயன்படுத்தலாமா என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் கேள்வியெழுப்பி இருந்தார்.
இந்நிலையில் இன்று இடமபெற்ற நாடாளுமன்ற அமர்வில் பேசிய சரத் வீரசேகர, குறித்த வாகனத்தை தான் பயன்படுத்தவில்லை என்றும் இது குறித்த ஆவணங்களை பொலிஸாரிடம் கையளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.








































