Loading...
கொழும்பு வெள்ளவத்தை நகரில் டப்ளியூ.ஏ.சில்வா மாவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்படடு வரும் கட்டிடம் ஒன்றில் தொழில் புரிந்து வந்த ஊழியர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் மின் தூக்கிக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து இந்த ஊழியர் தவறி கீழே விழுந்துள்ளார்.
Loading...
இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. வெள்ளவத்தையில் தற்காலிகமாக வசித்து வந்த 47 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...








































