ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற மேதின பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டின் வரலாற்றில் பாரியளவிலான மக்களின் கண்டனத்தைப் பெற்ற முதலாவது அரசாங்கம் இதுவே எனவும் தெரிவித்தார்.
இதேவேளை புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சஜித் பிரேமதாசவிற்கு பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபயவை பதவி விலகுமாறு மக்கள் தொடர்ச்சியாக கோஷமிட்டு வரும் நிலையில் எதிர்வரும் சில வாரங்களில் போராட்டங்கள் பலனளிக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.








































