Loading...
கொள்ளுப்பிட்டி அலாி மாளிகைக்கு முன்னால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களை உடனடியாக அகற்றுமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடைபாதை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், வீதியில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் சகல கட்டமைப்புகளையும் அகற்றுமாறே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading...
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமான அரச தலைவர் உட்பட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி இன்று 26 வது நாளாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading...








































