ராஜபக்ஷ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை இதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ருவிட்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவிட்டுள்ள அவர், தற்போதைய ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுத்து அரசாங்கத்தில் அமர முயற்சித்தால், அரசாங்கத்திற்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளிலிருந்தும் அவர்கள் விலகிக்கொள்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.








































